பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.வசந்த முதலிகே தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபரால் நீதிமன்றில் அறிக்கையிடப்படவுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.