அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் தென்கிழக்கு பனுதியில் உள்ள சான்ட்டேர்ஸ்டில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வீட்டில் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
45 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பி;ல் கைதுசெய்யப்பட்டுள்ளார்- கணவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரியவருவதாக அவுஸதிரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
44 வயது பெண்ணின் மகள் தாயை காப்பாற்றுவதற்காக அயலவர்களின் உதவியை நாடினார் ஆனால் காப்பாற்ற முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மகள் அயலவர்களின் வீடுகளை தட்டி உதவிக்காக மன்றாடுவதை காண்பிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
தந்தை என கருதப்படும் நபர் தனது மகனையும் மோசமாக தாக்கியுள்ளார் தலையில் பலத்த காயங்களுடன் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிளீஸ் பிளீஸ் என மகள் மன்றாடி நடந்த சம்பவத்தை விபரிப்பதை சிசிடிவியில் அவதானிக்க முடிகின்றது.
அம்மாற இறந்துவிட்டார் என நான் நினைக்கின்றேன் என அவர் தெரிவிப்பதையும் நாங்கள் வருகின்றோம் என அயலவர்கள் தெரிவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மகள் எனது அம்மா இறந்துவிட்டார் என தெரிவித்துக்கொண்டிருந்தார் என அயலவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட பெண் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.