இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கட்சியின் கொள்கைகளை மீறினார் என்று தெரிவித்து கண்டி எம்.பி வேலுகுமாரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியது தமிழ் முற்போக்கு கூட்டணி.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது,
“அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி எம்பி வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.