நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை விரும்பாதது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சோசியல் சயன்டிஸ்ட் அசோசியேசன் யுஎஸ்எயிட் ஆகியன இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
93 வீதமான மக்கள் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 40 வீதமானவர்கள் அரசசேவைக்கு ஆட்களை உள்வாங்குவதை குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கருத்துக்கணிப்பில்கலந்துகொண்டவர்களில் 70 வீதமான மக்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே காரணம் என கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம்தெரியவந்துள்ளது.