Our Feeds


Thursday, December 15, 2022

ShortNews Admin

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் தொடர்பு - எம்.ஏ. சுமந்திரன் பகிரங்க குற்றசாட்டு!



(எம்.நியூட்டன்) 


போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (15) வியாழக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்ததியை பாதிக்கின்ற விடயம் இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பது கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம். 

போதைப்பொருள் வருவதை தடுப்பது இது முக்கிய செயற்பாடு அரச அதிகாரிகளோடு பொலிஸாரோடு இணைந்து பல விடயங்களை செய்வது இதை செய்வதில் பாரிய இடர்பாடு காணப்படுகிறது காரணம் அதிகாரிகள், பொலிஸார், படைத்தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன்  தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது.

இதனை தடுப்பதற்காக இந்த தொழில் செய்பவர்களை காட்டிகொடுக்கின்றபோதேல்லாம் அவர்களோடு பொலிஸாரும் பாதுகாப்பு படையானரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கிறோம். போதைப் பொருள் பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும் இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம் இதனை பல விடயமாக மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »