Our Feeds


Thursday, December 1, 2022

ShortNews Admin

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை முடியவில்லை வாய்ப்புக் கிடைத்தால் நாட்டுக்கு சேவை செய்வேன் - கோட்டாவின் வலது கை அஜித் கப்ரால்




மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தனது அரசியல் மற்றும் தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


தகுந்த வாய்ப்பு கிடைத்தால் நாட்டிற்கு மீண்டும் சேவையாற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருடைய அரசியல் பயணத்திலும் வெற்றிகள் தோல்விகள் கண்டிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் ஏனையவர்கள் தன்னை சந்தேகிக்க தொடங்கியவேளை தான் தன்னை நம்ப ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என நான் கருதவில்லை,இதன் காரணமாக பொருத்தமான தருணம் வந்தால் சேவையாற்ற தயாராகவுள்ளேன்,இல்லாவிட்டால் எனக்கு ஆர்வமுள்ள பல விடயங்களில் கவனத்தை செலுத்தும் வாழ்க்கையை வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »