வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கு வரி விதிக்கப்படும் அல்லது வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படும் என்ற செய்தி பொய்யானது என தெரிவித்து, இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி அறவிடப்படுவதில்லை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்தை அவர்களது வங்கிக்கணக்குகளில் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாவாக மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமுமின்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.