“கோட்டா கோகம” மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.