சிறுநீரக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என, சிறுநீரக மோசடி குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள, கொழும்பு - பொறளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம், குறித்த வைத்தியசாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரகம் தொடர்பான சத்திர சிகிச்சைகளின்போது, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அந்த வைத்தியசாலையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.