ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று ஓமான் சென்றுள்ளது.
ஓமானுக்கான ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த குழு நேற்று (10) புறப்பட்டுச் சென்றுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒரு பெண் உப காவல்துறை பரிசோதகர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.