Our Feeds


Saturday, December 17, 2022

ShortNews Admin

பண்டாரகம பொலிசார் அதிரடி - போலி வாகன இலக்க தகடுகளை தயாரித்து விற்றவர் கைது!



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பதிவு இலக்கத் தகடுகளுக்கு நிகரான போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடமொன்று பண்டாரகம – ராய்கம பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரகம பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள், போலி நம்பர் பிளேட்டுகள், போலி நம்பர் பிளேட்களை தயார் செய்ய பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் அங்கிருந்து கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போலி இலக்கத் தகடு ஒன்றை தயாரித்து கொடுப்பதற்காக 1800 ரூபாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »