பண்டாரவளை – பூனாகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் நேற்று, பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பூனாகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.