இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை வேளையில் சாதாரண நிலையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று பிற்பகல் 53 என மதிப்பிடப்பட்ட மன்னாரின் காற்று தரச் சுட்டெண் தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது.
01.கொழும்பு – 124
02.புத்தளம் – 117
03.யாழ்ப்பாணம் – 109
04.கண்டி – 106
05.பொலன்னறுவை – 103
06.குருநாகல் – 100
07.கேகாலை – 97