தினேஷ் சாப்டரின் கொலையுடன் தொடர்புடையதாக
சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படும் நபர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொரளை மயானத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்து.