ஹொரணையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (05) மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக இந்த போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.