வெளிநாடு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.
மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சனத் நிஷாந்தவிற்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.