கொழும்பு, மட்டக்குளி சாவியா லேன் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி காரில் வந்த சிலரால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் ஒருவர் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைக் கொலை செய்வதற்கு வந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்கு காரை வழங்கிய குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பேஸ்லைன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளி சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் சாவியா லேனைச் சேர்ந்த மொஹமட் பதுர்தீன் மொஹமட் பர்ஹான் என பொலிஸார் தெரிவித்தனர்.