Our Feeds


Wednesday, December 14, 2022

ShortNews Admin

தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கம் செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செய்கிறது – தமிழ் தேசிய மக்கள் முன்னணி



தமிழ் மக்களினது காணியைச் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றது.


தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் வடகிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்களை கையகப்படுத்தி, அந்த இடங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.

என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், எல்லைக்கற்றகள் இடுவதற்கு முயற்சித்தவேளை மக்களின் எதிர்பால் அது நடைபெறவில்லை. இவ்விடையம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 26 இடங்களில் தொல்பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

அத்திணைக்களத்தினரது செயற்பாடுகளுக்கு அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பால் அவர்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளாது திரும்பிச் சென்றுள்ளார்கள்.

தமிழ் மக்களினது காணியைச் சுவீகரிக்கின்ற செயற்பாட்டை சிங்கள தேசம் மிகவும் கச்சிதமாக செயற்படுத்தி வருகின்றது.

தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் வடகிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக இடங்களை கையகப்படுத்தி, அந்த இடங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.

மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக தாம் எதுவித செயற்பாடுகளையும் செய்யவில்லை என உலத்திற்கும் தெரிவித்து வருகின்றார்கள். 

அனைத்துக் கட்சிகளின் சந்திப்புக்களுடாக, தமிழ் மக்களினாலும் தான் அங்கீகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்.

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளைச்  ஜனாதிபதி சந்தித்து வருகின்ற போதிலும், வடக்கு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

எனவே உலக மக்கள், சர்வதேச அமைப்புக்கள் அனைவரும் தமிழ் மக்களின் நிலமையைக் கருத்திற் கொண்டு ஒரு சரியான அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும்,  போலித்தனமான அரசியல் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »