பெரும்போக நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,678 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் பன்டி உரத்தை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
உரத் தொகையை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் மற்றுமொரு கப்பலும் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.