எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.