எஸ்.சதீஸ்
நோர்வூட் -பொகவந்தலாவை வரையிலான பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர், ரவி குழந்தைவேல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 22ஆம் திகதி நுவரெலியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த வீதி ஊடாக வைத்தியசாலைகளுக்கு அவசர நோயாளர்களைக் கொண்டு செல்லும் போது, இடை நடுவில் நோயாளர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் அண்மைக் காலங்களில் பதிவாகியுள்ளன.
அத்துடன், இந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதனால் வாகன சாரதிகளும் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
எனவே, இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்