கொடகம வட்டரக பகுதியில் இன்று (05) அதிகாலை கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, மூவாகம பெமானந்தா மாவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மற்றைய நபரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வட்டரெக்க குணவர்தன மாவத்தை ஊடாக மோட்டார் சைக்கிளில் இவர்களும் இருவரும் பயணித்த போது முன்னால் வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.