Our Feeds


Tuesday, December 13, 2022

ShortNews Admin

அமைச்சர்களுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே கால அவகாசம்!



தற்போதைய அமைச்சர்கள் மின் கட்டணத்தை செலுத்த இரண்டு வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த,

பல அரசாங்கங்களின் அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில், அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை விடுவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இடைக்காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்களை செலுத்துவதில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த முரண்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், செலுத்தப்படாத தொகை இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

உத்தியோகப்பூர்வ இல்லங்களின் செலுத்தப்படாத பில்கள் மீதும் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

எனவே புதிய பொறிமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபை குறித்த இடங்களில் நிலுவைகளை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »