Our Feeds


Wednesday, December 28, 2022

ShortNews Admin

சிறைச்சாலையில் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது எனக்கு என்ன நடந்தது....? திலினி பிரியமாலி பதில்!




“நான் நன்றாக இருந்தேன், சிறைக்குள் ஓய்வெடுத்தேன். நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை" என நிதி மோசடி குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட திலினி பிரியாமாலி கூறினார்.


சிறையிலிருந்து வெளியேறிய அவர்  நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்,

"நான் நலம். சிறைக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது எப்படி என்று தெரியவில்லை. இது அறிவிக்கப்பட்ட அளவுக்கு தீவிரமானது அல்ல. சிறைச்சாலையில் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஊடகங்களில் வெளியிடப்பட்டதைப் போன்று தீவிரமானது அல்ல.

பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைகள் அவை. நான் ஏன் இவ்வளவு பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. இவை இரண்டரை மாதங்களாக ஊடகங்களில் வெளிவந்தன. 

நான் செய்தவை, செய்யாதவை எல்லாம் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகின. எனக்கு ஒரு பெரிய அநியாயம் நடந்தது. என்னுடன் பழகியவர்கள் என்மீது கோபமாக இருந்தால், அவர்கள் எனக்கு நல்லது சொல்ல மாட்டார்கள். எனது எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நிறைய அனுபவம் கிடைத்தது.

ஓர்  அறிவாளி சிறைக்குச் சென்றால், இது ஒரு பல்கலைக்கழகமாக மாறும். நீதிமன்ற  தீர்ப்புப்படி எல்லாம் நடக்கும்,'' என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »