பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரேதிந்திக்களால் மாத்திரிமே சோதனைக்கு உட்படுத்த முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதனை நடைமுறை படுத்துவது தொடர்பில் இன்று இடம்பெற்ற காலம்தாந்துரையாடலில் தீர்மானிக்க பட்டதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுக்காப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.