பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாமையே இதற்கு காரணம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மின் கட்டண தொகை சுமார் நான்கரை இலட்சம் ரூபா எனவும் அந்த நாளிதழ் குறிப்பிடுகிறது.
வத்தளை அவெரிவத்தை எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.