புகையிரத நிலையங்களில் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலையங்களில் கனிஷ்ட பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலைமையினால் புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.