பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவர் ஒருவர் மீது மதுபோதையில் காணப்பட்டதாக கூறப்படும் நான்காம் வருட மாணவர் ஒருவர் தாக்கிய சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், தற்போது நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் கலைப் பீடத்தில் முதலாம் வருட மாணவன் ஆவார்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் தங்கியிருந்தபோது சிரேஷ்ட மாணவர்கள் மூவர் வந்து தன்னை அச்சுறுத்தியதாகவும், அதில் ஒருவர் தன்னை கையால் எட்டி உதைத்ததாகவும் மற்றுமொரு மாணவர் தனக்கு உதவி செய்ததாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் தெரிவித்துள்ளார்.