ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள், மருமகன், பாட்டி, தாத்தா ஆகியோர் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இதுவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத 19 குடும்பங்களுக்கு திருணமப் பதிவு செய்யப்பட்டது.
சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினால் அந்த குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளையும் ஊழியர்களின் நலன்புரி நிதியை பெற்றுக்கொள்வதிலும் உள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காகவுமே இந்த திருமணப் பதிவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்டி மாவட்ட செயலாளர் மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் ஆகியோர் சாட்சிகளாக திருமணப் பதிவு பத்திரங்களில் கையொப்பமிட்டுள்ளனர்.