ஐக்கிய மக்கள் சக்தியினர் எனது குடியுரிமை விவகாரத்தை
கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்க ஆரம்பித்துள்ளார்கள்.என்னை பகைத்துக் கொண்டால் இருக்க விடமாட்டேன் அதனால் எனது கட்சியின் உரிமை கோரி ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (15 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.