பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
சிறுநீரக விற்பனை விவகாரம் வெளியானதையடுத்து குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.