இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பிரதமராக பதவியேற்ற திரு.அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேசியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.