இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டமாகவும் இது அமையுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்