நைஜீரிய பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்களின் நலம் குறித்து ஆராய கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் அங்கு சென்றுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம், நைஜீரியப் பாதுகாப்புப் படையினரால் நோர்வேயின் எரிபொருள் கப்பல் சட்டவிரோதமாக தனது கடல் எல்லைக்குள் நுழைந்ததற்காகக் காவலில் வைக்கப்பட்டது.
கப்பலில் இருந்த 26 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏனைய உறுப்பினர்கள் இலங்கை, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இலங்கையர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.