கல்நேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டியவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கல்நேவயிலிருந்து புல்னேவ நோக்கி பயணித்த வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது விபத்தை தொடர்ந்து காரின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் இருந்த மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் கல்நேவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் 25 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.