நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற கால நிலையால் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகின்றது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு மின் கம்பிகள் அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கமான 021 202 4444 என்ற எண் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.