கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த உணவகத்தில் 7 ஐஸ் பொதிகளும் 38 மாத்திரைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.