கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (2) இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் மாமனார் அவரை கட்டையால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று 4ஆம் திகதி வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.