ரஷ்யாவின் இரு இராணுவ வான்தளங்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்ளில் பலர் உயிரிழழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மொஸ்கோவுசக்கு தென்கிழக்கிலுள்ள ரியாஸன் நகருக்கு அருகிலுள்ள வான்தளததில் எரிபொருள் வாகனமொனறு வெடித்ததால் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளரன்.
அத்துடன், சராடோவ் பிரநர்தியத்திலுள்ள வான்தளமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு படைத்தளங்களும் யுக்ரைன் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் உள்ளன.
அதேவேளை, மேற்படி சம்பவங்களுக்கு யுக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.