பெண் ஒருவருக்கு தனது சாரத்தை உயர்த்திக் காட்டிய குற்றச்சாட்டின்பேரில் வலல்லாவிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இத்தபான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டுக்கு அருகே உள்ள காணியில் விறகு வெட்டும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முறைப்பாட்டாளரைக் கடுமையாகத் திட்டியதோடு, சந்தேக நபர் தான் அணிந்திருந்த சாரத்தை உயர்த்திக் காட்டியதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.