கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை இன்று(18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை தொடர்பாக, சமுதித சமரவிக்ரம, பாதுகாப்பு ஆய்வாளர் கீர்த்தி தென்னகோன் உடனான Truth with Chamuditha என்ற நிகழ்ச்சியில் அது தொடர்பான பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
“ஜனசக்தி தலைவர் கொல்லப்பட்டு நெடுஞ்சாலையில் விடப்படும் வரை பொலிஸார் என்ன செய்தார்கள்?”
“சந்தேக நபர் திலினி பிரியமாலியை விட பெரிய நிதி மோசடி செய்தவர்.”
“பிரையன் தாமஸ் இனை அந்த இடத்திற்கு உயர்த்தியது இலங்கையில் உள்ள பிரபல ஊடகமொன்று ?”
“இறந்த நபர் மட்டும் இந்த மோசடிக்காரரிடம் சிக்கினார், ஆனால் இலங்கையின் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கூட இதில் உள்ளடங்குகின்றனர்..”
“சரியான நேரத்தில் பொலிசார் சரியான முறையில் செயல்பட்டிருந்தால், தினேஷ் சாஃப்டர் வீதியில் இறந்திருக்க மாட்டார்.”
பாதுகாப்பு ஆய்வாளர் கீர்த்தி ரத்நாயக்க பல விடயங்களில் உண்மைகளை கோடிட்டுக் காட்டுகிறார்.
இந்நாட்டின் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையில் மர்மம் நீடிக்கிறது.
முன்னணி நிதி நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளரும் காப்புறுதி நிறுவனத்தின் குழும பணிப்பாளருமான ஷாஃப்டரின் கொலை தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அவரது கைகள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஏதோவொன்றால் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது உடலும் கழுத்தும் வாகனத்தின் இருக்கையில் கம்பியினால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கைகளின்படி, அவரது மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஷாஃப்டர் பிற்பகல் (டிசம்பர் 15) பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவு உயிரிழந்தார்.
விசாரணைகளின் முன்னேற்றம் என்ன?
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு மற்றும் கொலைப் பிரிவு, கொழும்பு குற்றப் பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்களால் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினேஷ் ஷாப்டரின் வாகனத்தில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதை கண்டறிய தேவையான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிசிடிவி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, சந்தேக நபர்களை விரைவில் கைது செய்வதற்கு தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்து, தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த குற்றச்செயல்களை தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களை அந்தஸ்து பாராமல் கையாளுமாறு உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.