நோயினால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராதமை காரணமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் ஒருவர் ஜா - எல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முன்னாள் அமைச்சர் கொழும்பில் உள்ள வீடொன்றில் வசிப்பதாகவும், தனது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்க்கு உடல் நலக்குறைவாக உள்ளதால் சிகிச்சைக்கு வருமாறு கூறியதாகவும், ஆனால் தான் வரமாட்டேன் என கூறியதால் தனது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.