கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருட்கள் பெரும்பாலும் “பாண் தூளாக” மாறுவதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனூடாக குறித்த போதைப்பொருட்கள் மீண்டும் மக்களின் கைகளுக்கு செல்லும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் சோதனையின் பின்னர் தாம் கண்டுபிடிக்கும் போதைப்பொருட்களை மக்களுக்கு மீண்டும் அனுப்பி வைக்கும் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.