ரயில் பாதையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மூவர் மீது ரயிலில் மோதுண்டதில் குறித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத பாதையில் நின்று புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.