இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசாக் ஹேர்ஸோக் பஹ்ரெய்ன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் அவர் பஹ்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டார். பஹ்ரெய்னுக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.
பஹ்ரெய்ன் மன்னர் பின் இசா அல் கலீபா மற்றும் முடிக்குரிய இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமட் பின் கலீபா ஆகியோரை இஸ்ரேலிய ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
பிராந்திய பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடிர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹ்ரெய்னிலிருந்து நேற்று திங்கட்கிழமை புறப்பட்ட இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசாக் ஹேர்ஸோக், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றார்.
அபுதாபியில் நடைபெறும் அபுதாபி விண்வெளி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றார்.
அபுதாபியின் ஆட்சியாளர் மொஹம்மத் பின் அல் நெஹ்யானையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
இஸ்ரேலுடன் பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம், மொரோக்கோ ஆகியன இஸ்ரேலுடனான உறவை 2020 ஆம் ஆண்டு சுமுகமயமாக்கியமை குறிப்பிடத்தக்கது.