கண் அழுத்த நோய் எனப்படும் கிளௌகோமா நோயாளிகள் சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
கிளௌகோமாவால் குருட்டுத்தன்மை ஏற்பட்டால், அதை சரிசெய்ய முடியாது என்றும், கிளௌகோமா நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமூகத்தில் கண்டறியப்படாத நோயாளிகள் பலர் இருப்பதாகவும் வைத்தியர் கூறினார்.
மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு கிளௌகோமா மற்றும் நியோவாஸ்குலர் கிளௌகோமா எனப்படும் மிகவும் கடுமையான நிலை உருவாகும் ்அதிகம்.
ஆகவே, நீரிழிவு நோயாளிகள் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.