முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்தக வியாபாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் தலைவர் நந்திக கங்கந்த இதனைத் தெரிவித்தார்.
மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித சேனாரத்ன பொறுப்பேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கான பணிகளை அவர் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.