கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை பலவந்தமாக அழித்தமைக்கான சாட்சியங்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சாட்சியத்தை ஆரம்பத்தில் போராட்டத்தில் முன்னணியில் இருந்த ‘மோட்டிவேஷன் அப்பச்சி’ என்ற சமூக ஊடக செயற்பாட்டாளரான பியூமல் சமரசிங்க வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.
காலி முகத்திடலைச் சுற்றி போராட்டம் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னெடுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பினால் போராட்ட இயக்கம் கடத்தப்பட்டு, அழிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.