தான் ஓய்வூ பெற போவதில்லை என ஆஜன்டீனா கால்பந்தாட்ட அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான லயனல் மெஸி தெரிவித்துள்ளார்.
கட்டாரில் நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி எதிர்த்து விளையாடிய ஆஜன்டீனா, கால்பந்து உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இம்முறை உலக கிண்ண போட்டிகளுடன் தான் ஓய்வூ பெற போவதாக மெஸி, ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், உலக கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் அவர் தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
தனக்கு மேலும் பல போட்டிகளின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி. 2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் கோபா போட்டிகளிலும், அடுத்த உலக கிண்ண போட்டிகளிலும் பங்குப்பற்ற எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.