Our Feeds


Wednesday, December 14, 2022

ShortNews Admin

ட்விட்டரின் பாதுகாப்புக் குழுவையும் தூக்கியெறிந்தார் எலான் மாஸ்க்




ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


100க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்” என கூறப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »